கணேவல அணைக்கட்டினை மீள நிர்மானிக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
கெஸ்பாவ குளத்தினைச் சுற்றி நிர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சி வழித் தடம் 2018 பெபரவரி மாதம் 22 ஆம் தேதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான ஆலோசனைகள் மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான கௌரவ அமைச்சர் காமினி திலக்கசிரி அவர்களின் பங்குபற்றலுடன் 2017-12-21 ஆம் தேதி மேல் மாகாண அழகியற் கலையரங்கில் நடைபெற்ற “நிறுவனங்களுக்கிடையிலான செயலாற்றுகை முகாமைத்துவப் போட்டியில்” முதலாவது பிரிவில் முதலாவது இடத்தினை மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் தனதாக்கிக்கொண்டது.