தகவல் சட்டத்தின் விபரம்
RTI கருத்து
குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.
இந்த உரிமையை சிறந்த முறையில் பேணிப் பாதுகாப்பதற்கு மூவகையான அடிப்படைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
இதன் மூலம் கருதப்படுவது யாதெனில் மக்களுக்குத் தேவையான தகவல்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் ஆகும். தகவல்களின் கிடைப்பனவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஊடகங்கள் தடையின்றி சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படலே இதன் கருத்து ஆகும். விசேடமாக வெகுஜன ஊடகங்கள் தணிக்கை அல்லது தடையின்றி சுதந்திரமாகவும் தலையீடுகள் அற்ற விதமாகவும் செயற்பட வேண்டுமென்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.