நிறுவன கட்டமைப்பு
மேல் மாகாணத்தில் அமைந்துள்ள சிறு நீர்ப்பாசனத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்குரிய சேவைகளை வழங்கும் “A” தரத்திற்குரிய திணைக்களமாகிய மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விடயங்களை நிர்வகித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மேல் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொறியியல் சேவையின் 1-ஆம் தர அலுவலர் ஒருவர் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதோடு மாகாண நீர்ப்பாசன விடயப் பொறுப்பு செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மேல் மாகாண சிறு நீர்ப்பாசன நியதிச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நியதிச் சட்டத்தின் விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு மேல் மாகாணத்தின் 03 மாவட்டங்களிற்காகவும் தனியான மாவட்டப் பொறியியலாளர் அலுவலகங்கள் 03 நிறுவப்பட்டு அவற்றிற்கான நிறுவனத் தலைவர்களாக மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பிரதான அலுவலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள தலைமையகப் பொறியியலாளரினால் திணைக்களத்தின் அனைத்து கடமைகளும் வழிநடாத்தப்படுகின்றது. மேலும், திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவுத் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி நடவடிக்கைகளும் திணைக்கள கணக்காளரது மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரது மேற்பார்வை மற்றும் விதப்புரைகளின் கீழ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரம், காரியங்கள் மற்றும் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.